1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated: செவ்வாய், 16 நவம்பர் 2021 (10:17 IST)

வெற்றிக் கொண்டாட்டம்… ஷூவில் குளிர்பாணம் ஊற்றிக் குடித்த ஆஸி வீரர்கள்!

டி 20 உலகக்கோப்பையை வென்ற ஆஸ்திரேலிய அணி வீரர்கள் வெற்றிக் கொண்டாட்டத்தில் ஷூவில் குளிர்பாணம் ஊற்றிக் குடித்த புகைப்படம் வெளியாகியுள்ளது.

டி 20 உலகக்கோப்பையை யாரும் எதிர்பார்க்காத விதமாக ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. இதுவரை டி 20 உலகக்கோப்பையை வெற்றி பெறாத ஆஸி அணி வெற்றி பெற்றதை அடுத்து மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர்கள் இருக்கிறார்கள். இந்த மகிழ்ச்சியை கொண்டாடி வரும் நிலையில் வித்தியாசமாக ஷூவில் குளிர்பானத்தை ஊற்றி அந்த அணியின் மேத்யு வேட் மற்றும் மார்கஸ் ஸ்டாய்னஸ் ஆகியோர் அருந்தியது இணையத்தில்  வீடியோவாக வெளியாகி கவனத்தைப் பெற்றது.