அம்பயரை மிரட்டினாரா தோனி? 19வது ஓவரில் நடந்த பரபரப்பு

அம்பயரை மிரட்டினாரா தோனி? 19வது ஓவரில் நடந்த பரபரப்பு
siva| Last Updated: புதன், 14 அக்டோபர் 2020 (07:57 IST)
அம்பயரை மிரட்டினாரா தோனி? 19வது ஓவரில் நடந்த பரபரப்பு
நேற்று நடைபெற்ற சென்னை மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையிலான போட்டியில் சென்னை அணி 20 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பதை ஏற்கனவே பார்த்தோம்


இந்த நிலையில் நேற்றைய போட்டியில் அம்பயர் வைட் காட்டுவதற்காக கையை விரிக்க முயன்றபோது தோனி அவரைப் பார்த்து கடுமையாக கோபம் கொண்டதால் வைட் கொடுக்காமல் கையை பாதியிலேயே அம்பயர் மூடிக் கொண்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

நேற்றைய போட்டியில் 19-வது ஓவரை வீச வந்தவர் சென்னை அணியின் ஷர்துல் தாக்கர் அந்தப் பந்தை எதிர்கொள்ள ரஷீத்கான் தயாராக இருந்தார். அப்போது அந்த பந்து வைடாக சென்றதால் அம்பயர் வைட் கொடுக்க தயாராக கையை அகலமாக விரிக்க முயன்றார்.
அப்போது விக்கெட் கீப்பிங் நின்று கொண்டிருந்த தோனி கடும் கோபம் கொண்டவளாக அவரை பார்த்து ஏதோ சொன்னார். உடனே வைடுக்கு கையை விரிக்க இருந்த நடுவர் கையை விரிக்காமல் நிறுத்திவிட்டார். இதனை வெளியில் உட்கார்ந்து பார்த்துக் கொண்டிருந்த ஐதராபாத் அணியின் கேப்டன் வார்னர் கடும் டென்சன் ஆனார்

இந்த பந்தை ரீப்ளேயில் பார்க்கும்போது அது வைட் என்பது தெரியவந்தது. இதனால் ஐதராபாத்தில் ஒரு ரன் பறிபோனதோடு ஒரு பந்தும் வீணானது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஒரு பந்தில் ஒரு சிக்சர் அல்லது ஒரு பவுண்டரி அடித்து இருந்தால் ஹைதராபாத் அணிக்கு இன்னும் கொஞ்சம் வெற்றி பெற வாய்ப்பு இருந்திருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது
வழக்கமாக வெற்றி தோல்வி இரண்டையும் சரிசமமாக எடுத்துக் கொள்ளும் கூல் கேப்டன் தோனி நேற்று ஒரே ஒரு வைடுக்காக டென்ஷனாகி அம்பயரையே மிரட்டிய வகையில் கோபப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது


இதில் மேலும் படிக்கவும் :