செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 13 அக்டோபர் 2020 (11:44 IST)

தல தோனிக்காக என்ன வேணா பண்ணுவோம்! – தன் வீட்டை தல வீடாக மாற்றிய ரசிகர்!

அரபு அமீரக்த்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டியில் தோனியின் சிஎஸ்கே அணி விளையாடி வரும் நிலையில் தோனி ரசிகர் ஒருவர் செய்துள்ள செயல் இணையத்தில் வைரலாகியுள்ளது.

அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் ஐபிஎல் போட்டிகளில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விளையாடி வருகிறது. நீண்ட நாள் கழித்து தோனியின் ஆட்டத்தை காண ரசிகர்கள் ஆர்வமுடன் எதிர்பார்த்த நிலையில் சிஎஸ்கே தொடர் தோல்விகளை தழுவி வருவது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் சிஎஸ்கே ரசிகர்களே பலர் சிஎஸ்கேவையும், தோனியையும் விமர்சித்து பதிவுகள் போடுவது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் பல தோனி ரசிகர்கள் தோற்றாலும் தோனியை விட்டுக்கொடுக்க மாட்டோம் என களத்தில் இறங்கியுள்ளனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகேயுள்ள அரங்கூரில் உள்ள கோபிகிருஷ்ணன் என்பவர் தீவிரமான தோனி ரசிகர். இந்த ஐபிஎல் போட்டியில் தோனி அணி வெற்றிபெற வேண்டும் என்று விரும்பிய அவர் தனது ஆதரவை வித்தியாசமான முறையில் காட்டியுள்ளார். தனது வீட்டையே சிஎஸ்கேவின் மஞ்சள் நிற பெயிண்டால் அலங்கரித்துள்ள அவர், அதில் தோனியின் படங்களையும் வரைந்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.