வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 28 டிசம்பர் 2020 (12:02 IST)

இந்திய அணிக்கு மேலும் ஒரு பின்னடைவு – வெளியேறிய வேகப்பந்து வீச்சாளர்!

இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் காயம் காரணமாக மைதானத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பாக்சிங் டே டெஸ்ட் போட்டி கடந்த 26ஆம் தேதி தொடங்கிய நிலையில் முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 195 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. அதன் பின்னர் ஆடிய இந்திய அணி கேப்டன் ரஹானேவின் சதத்தால் 326 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம் இந்திய அணி 131 ரன்கள் முன்னிலைப் பெற்றது. இந்நிலையில் தொடர்ந்து ஆடிய ஆஸி அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் சொதப்பலான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறது.

இந்நிலையில் இந்திய அணிக்குப் பின்னடைவாக வேகப்பந்து வீச்சாளர் உமேஷ் யாதவ் முழங்காலில் தசைப் பிடிப்புக் காரணமாக வெளியேறியுள்ளார். ஏற்கனவே முகமது ஷமி இதுபோல தொடரில் இருந்தே வெளியேறிய நிலையில் உமேஷின் காயம் இந்தியாவுக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.