1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
  4. India had make corona vaccine practice today

இந்தியாவில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை! – இன்று தொடக்கம்!

Indian
இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1 கோடியை தாண்டியுள்ள நிலையில் கொரோனா தடுப்பூசி ஒத்திகை பணிகள் இன்று தொடங்கப்படுகிறது.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்புகள் ஒரு கோடியை தாண்டியுள்ள நிலையில், கொரோனாவை கட்டுப்படுத்த கோவெக்சின் மற்றும் கோவிஷீல்டு உள்ளிட்ட தடுப்பூசிகளை மக்களுக்கு செலுத்த இந்தியா தயராகி வருகிறது.

இந்நிலையில் இன்று முதல் பஞ்சாப், குஜராத், அசாம், ஆந்திரா உள்ளிட்ட 4 மாநிலங்களில் இந்த தடுப்பூசிகளை செலுத்துவதற்கான ஒத்திகை பணிகள் தொடங்கப்படுகின்றன. அமெரிக்கா, ஐரோப்பாவை தொடர்ந்து இந்தியாவிலும் ஒத்திகை பணிகள் தொடங்கியுள்ளதால் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு தடுப்பூசி வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
முருங்கை கீரையில் உள்ள சத்துக்கள் என்ன...? பயன்கள் என்ன...?