அவர் மட்டும் அணியில் சேர்க்கப்பட்டால் அற்புதங்களை நிகழ்த்துவார்… தினேஷ் கார்த்திக் கணிப்பு!
தமிழக அணியைச் சேர்ந்த தினேஷ் கார்த்திக் டி 20 உலகக்கோப்பையில் வருண் சக்கரவர்த்தி தேர்வு செய்யப்பட்டால் அற்புதங்களை நிகழ்த்துவார் எனக் கூறுவார்.
தமிழகத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய டி 20 அணியில் இடம்பிடித்தார். ஆனால் அவர் காயமடைந்ததால் அவரால் இன்னும் போட்டிகளில் களமிறங்கிய சிறப்பாக செயல்பட முடியவில்லை. இந்நிலையில் டி 20 உலகக்கோப்பையில் அவர் தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்தது.
இதுபற்றி பேசியுள்ள தினேஷ் கார்த்திக் இந்திய டி20 உலகக் கோப்பை அணியில் வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட வேண்டும். அவர் ஒரு ஸ்பெஷலான வீரர். அவர் மட்டும் தேர்வு செய்யப்பட்டால் அற்புதங்களை நிகழ்த்துவார் என நான் உறுதியாக நம்புகிறேன். எனக் கூறியுள்ளார்.