செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 11 ஏப்ரல் 2020 (10:16 IST)

2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் நடப்பதும் சந்தேகமே... வெளியான புது தகவல்!

2021 ஆம் ஆண்டு ஒலிம்பிக் நடப்பதும் சந்தேகமே என ஒலிம்பிக் தலைமை செயல் அதிகாரி சூசகமாக தெரிவித்துள்ளார். 
 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது தெரிந்ததே.
 
இதன்படி ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாராலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 24 தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில், ஜப்பானில் நாளுக்கு நாள் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. கொரோனா பீதியால் ஜப்பானில் அவசர பிரகடன நிலை அமலில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 
 
எனவே, டோக்கியோ ஒலிம்பிக் தலைமை செயல் அதிகாரி, அடுத்த ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்ட ஒலிம்பிக் போட்டி நடக்குமா என அதிகாரப்பூர்வமாக எதுவும் குறிப்பிட முடியாது என கூறியுள்ளார்.