செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Sinoj
Last Updated : சனி, 4 ஏப்ரல் 2020 (21:02 IST)

இந்திய ஹாக்கி விளையாட்டு அமைப்பு மேலும் ரூ. 75 லட்சம் நிதி உதவி

சீனாவில் இருந்து பரவியுள்ள கொரோனா வைரஸால் ஒட்டு மொத்த உலக நாடுகளும் பெரும் பொருளாதார இழப்புகளையும், உயிர் பலிகளையும் சந்தித்து வருகின்றன.

கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க இந்தியாவிலும் வரும் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், மக்கள் வீடுகளில் உள்ளதால் அவர்களுக்கு  இந்த 21 நாட்களும் பெரும் இக்கட்டான நிலையாகப் பார்க்கப்படுகிறது.

எனவே கொரொனா தடுப்புக்காக பிரதமரின் நிவாரண நிதிக்கு உதவலாம் என பிரதமர் மோடி அறிவித்தார். அதன்படி, பிரபல டாடா, ரிலையன்ஸ், மகேந்திரா, விப்ரோ, விளையாட்டு வீரர்கள், நடிகர்கள் அரசியல்வாதிகள் என பலரும் உதவி செய்து வருகின்றனர்.

இந்த நிலையில், ஏற்கனெவே ரூ. 25 லட்சம் பிரதமர் நிவாரண நிதிக்கு அளித்திருந்த இந்திய ஹாக்கி அமைப்பு,தற்போது இன்று மேலும் ரூ. 75 லட்சம் தருவதாக அறிவித்துள்ளது. எனவே ஹாக்கி அமைப்பு  மொத்தம் ரூ. 1 கோடி வழங்கியுள்ளது. 

இதை நெட்டிசன்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.

உலகில் பணக்கார விளையாட்டு அமைப்பான இந்திய கிக்கெட் அமைப்பான பிசிசிஐ ரூ.51 லட்சம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.