ஒலிம்பிக் நடப்பது சந்தேகமே... ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தகவல்!

Sugapriya Prakash| Last Modified புதன், 29 ஏப்ரல் 2020 (11:07 IST)
கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் டோக்கியோ ஒலிம்பிக் ரத்து செய்யப்படலாம் என ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் தெரிவித்துள்ளார். 
 
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த ஆண்டு ஜூலை மாதம் 24 ஆம் தேதி டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் 2021 ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கபட்டுள்ளது தெரிந்ததே. 
 
இதன்படி ஒலிம்பிக் போட்டிகள் 2021ஆம் ஆண்டு ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 8 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பாராலிம்பிக் போட்டி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் 24 தொடங்கி செப்டம்பர் 5 ஆம் தேதி வரை நடைபெறும் என்றும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.  
 
இந்நிலையில், அடுத்தாண்டுக்குள் கொரோனா கட்டுப்பாட்டுக்குள் வராவிட்டால் டோக்கியோ ஒலிம்பிக் ரத்து செய்யப்படலாம் என ஒலிம்பிக் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் யோஷிரோ மோரி தெரிவித்துள்ளார்.
 
மேலும், கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்படாத சூழலில் ஒலிம்பிக் நடத்துவது மிகவும் கடினம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.


இதில் மேலும் படிக்கவும் :