தொடர்புடைய செய்திகள்
- சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை.. அடுத்த 3 மணி நேரத்தில் மிதமான மழை..!
- அடிக்க வந்த ஜடேஜா.. பேட்டை வாள் போல் சுழற்றிய வார்னர்! – வைரலாகும் வீடியோ!
- மரண பயத்த காட்டிட்டான் பரமா..! ரின்கு சிங் அதிரடியால் கலங்கிய லக்னோ!
- அதிரடி சரவெடி ஆட்டம்.. ப்ளே ஆப்க்கு முன்னேறிய சிஎஸ்கே, லக்னோ அணிகள்!
- ஐபிஎல்-2023: படோனி, நிகோலஸ் அரைசதம்... கொல்கத்தா அணிக்கு வெற்றி இலக்கு இதுதான்
மே 23ல் குவாலிஃபையர் 1: குஜராத் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி வைக்கும் சிஎஸ்கே..!
ஐபிஎல் கிரிக்கெட் போட்டி தற்போது இறுதி கட்டத்திற்கு வந்துள்ள நிலையில் இன்று நடைபெறும் இரண்டு போட்டிகளோடு லீக் சுற்றுகள் முடிவடைகின்றன. இதனை அடுத்து நாளை மறுநாள் அதாவது மே 23ஆம் தேதி சென்னை மற்றும் குஜராத் அணிகள் மோதும் குவாலிஃபயர் 1 போட்டி நடைபெற உள்ளது.
சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற உள்ள இந்த போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு செல்லுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த போட்டியில் தோல்வி அடையும் அணி குவாலிபயர் 2 போட்டியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது. குஜராத் அணியை பொருத்தவரை 13 போட்டிகளில் விளையாடி 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அந்த அணியின் தொடர் வெற்றிக்கு சிஎஸ்கே அணி நாளை மறுநாள் முற்றுப்புள்ளி வைக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
Edited by Siva
அடுத்த கட்டுரையில்
