வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 மே 2023 (15:12 IST)

சென்னை மைதானத்திலும் எங்களால் வெல்ல முடியும்: சுப்மன் கில் நம்பிக்கை

subman gil
சென்னை மைதானத்தில் எங்களால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது என குஜராத் அணியின் பேட்ஸ்மேன் சுப்மன் கில் தெரிவித்துள்ளார். 
 
2023 ஆம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் லீக் போட்டிகள் முடிவடைந்து தற்போது பிளே ஆப் போட்டிகள் நடைபெற உள்ளன. முதல் பிளே ஆப் போட்டி நாளை  சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. 
 
இந்த நிலையில் நேற்றைய போட்டியில் செஞ்சுரி அடித்த சுப்மன் கில் பேட்டி அளித்தபோது ’சென்னை மைதானத்தில் எங்களால் சிறப்பாக விளையாட முடியும் என்றும் எங்களிடம் சிறந்த பௌலிங் இருப்பதால் சென்னையில் எங்களால் வெல்ல முடியும் என்று தெரிவித்தார். 
 
மேலும் இரண்டாவது முறையாக எங்கள் அணி இறுதிப் போட்டிக்கு செல்லும் என்ற நம்பிக்கை எங்களிடம் உள்ளது என்றும் என்னுடைய விளையாட்டை நான் சிறப்பாக விளையாடேன் என்றும் அவர் கூறியுள்ளார். 
 
சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவு இருக்கும் நிலையில் சென்னை அணியை குஜராத் அணி வெல்லுமா என்பதை நாளை வரை போர் திறந்து பார்ப்போம்
 
Edited by Mahendran