வெள்ளி, 1 மார்ச் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 21 மே 2023 (16:50 IST)

சின்னசாமி ஸ்டேடியத்தை கும்மி எடுக்கும் மழை! – ஆர்சிபி ஆட்டம் என்ன ஆகும்?

Chinnasamy stadium
இன்று ப்ளே ஆப் தகுதி பெறுவதற்காக ஆர்சிபி அணிக்கு இருந்த கடைசி போட்டி மழை காரணமாக நிறுத்தப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஐபிஎல் லீக் போட்டிகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில் ப்ளே ஆப் தகுதிக்கான நான்காவது இடத்தை அடைய மும்பை இந்தியன்ஸ் அணியும், ஆர்சிபி அணியும் இன்று மற்ற இரு அணிகளுடன் மோதுகின்றன. பிற்பகல் ஆட்டத்தில் மும்பை – சன்ரைசர்ஸ் அணிகள் விளையாடி வரும் நிலையில், மாலை 7.30 ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் அணி குஜராத் டைட்டன்ஸை எதிர்கொள்ள உள்ளது.

பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்க உள்ள நிலையில் அப்பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஸ்டேடியம் முழுவதும் மழை நீராக உள்ளது. அதனால் இன்று ஆர்சிபி – குஜராத் டைட்டன்ஸ் போட்டிகள் நடக்குமா என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த போட்டி நடக்காவிட்டால் ஆர்சிபி மற்றும் குஜராத் டைட்டன்ஸுக்கு தலா 1 புள்ளிகள் வழங்கப்படும். இதனால் ஆர்சிபியின் புள்ளிகள் 15 ஆக உயரும் என்றாலும், தற்போது நடந்து வரும் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் வென்றால் 16 புள்ளிகளுடன் 4வது இடத்திற்கு சென்று விடும்.

எனவே ஆர்சிபி மேட்ச் நடக்கவில்லை என்றால் மும்பை அணி தோற்றால் மட்டுமே ஆர்சிபி ப்ளே ஆப் செல்ல முடியும் என்பதால், ஆர்சிபி ரசிகர்கள் மழை நிற்க வேண்டும் என்றும், மும்பை இந்தியன்ஸ் தோற்க வேண்டும் எனவும் பிரார்த்தனைகளை தொடங்கியுள்ளனர்.

Edit by Prasanth.K