வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 7 மே 2019 (07:09 IST)

தோனியா? ரோஹித்தா? இறுதிப்போட்டிக்கு செல்வது யார்?

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் கிளைமாக்ஸ் நெருங்கிவிட்டதை அடுத்து இன்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியும், மும்பை அணியும் முதல் பிளே ஆஃப் போட்டியில் விளையாடவுள்ளது
 
இந்த தொடரில் சிஎஸ்கே அணியை இரண்டு முறை மும்பை அணி வீழ்த்தியுள்ளதால் அந்த அணி புதிய தெம்புடன் காணப்படும். அதே நிலையில் இன்றைய போட்டியில் வென்று இரண்டு தோல்விகளுக்கு பழி வாங்குவதோடு, நேரடியாக இறுதி போட்டியில் தகுதி பெற தோனியின் டீமும் முழு முயற்சியில் இறங்கும்
 
காயம் காரணமாக சென்னை அணியின் கேதார் ஜாதவ் அணியில் இருந்து விலகியுள்ளது ஒரு பலவீனமாக பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் முக்கிய போட்டிகளில் வாட்சன் வெகுண்டெழுந்து தனது அதிரடியை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை தோனியிடம் உள்ளது. ஏற்கனவே டூபிளஸ்சிஸ், ஜடேஜா, பிராவோ, தோனி, தீபக் சஹார், ஹர்பஜன்சிங், இம்ரான் தாஹிர் ஆகியோர் நல்ல ஃபார்மில் உள்ளது சிஎஸ்கே அணிக்கு சாதகமான அம்சங்கள்
 
அதேபோல் மும்பை அணியின் மொத்த டீமும் நல்ல ஃபார்மில் உள்ளது. குறிப்பாக ரோஹித்சர்மாவின் கேப்டன்ஷிப், ஹர்திக் பாண்டியாவின் அதிரடி பேட்டிங், மலிங்காவின் அனல் பறக்கும் பந்துவீச்சு ஆகியவை இந்த அணிக்கு சாதகமாக உள்ளது. 
 
இருப்பினும் டி20 கிரிக்கெட்டை பொருத்தவரை அன்றைய தினம் யாருக்கு அதிர்ஷ்டமோ, அந்த அணிதான் வெற்றி பெறும். எனவே இன்றைய வெற்றி யாருக்கு? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்