டிஎன்பிஎல் கிரிக்கெட்: தூத்துகுடி அணி த்ரில் வெற்றி

Last Modified வெள்ளி, 26 ஜூலை 2019 (07:43 IST)
கடந்த ஒரு வாரமாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடந்த ஒரு போட்டியில் தூத்துகுடி அணி, கோவை அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது
மழை காரணமாக நேற்றைய போட்டி 13 ஓவர்களாக குறைக்கப்பட்ட நிலையில் முதலில் பேட்டிங் செய்த தூத்துகுடி அணி 13 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 155 ரன்கள் எடுத்தது. சுப்ரமணிய சிவா 44 ரன்களும், ஸ்ரீனிவாசன் 31 ரன்களும், சரவணன் 29 ரன்களும் எடுத்தனர்.

இதனையடுத்து 13 ஓவர்களில் 156 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய கோவை அணி 7 விக்கெட்டுக்களை இழந்து 149 ரன்கள் எடுத்தது. கடைசி இரண்டு பந்துகளில் சிக்ஸர்கள் அடித்தபோதிலும் அந்த அணியால் இலக்கை எட்ட முடியவில்லை.
மூன்று விக்கெட்டுக்களை வீழ்த்திய தூத்துகுடி அணியின் அந்தோணி தாஸ் ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார். இன்று சேப்பாக்கம் அணிக்கும் காரைக்குடி அணிக்கும் போட்டி நடைபெறவுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :