67 ரன்களில் சுருண்ட காரைக்குடி: காஞ்சி வீரன்ஸ் அணி அபார வெற்றி

Last Modified புதன், 24 ஜூலை 2019 (23:15 IST)
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் இன்று காரைக்குடி காளை அணியும் காஞ்சி வீரன்ஸ் அணியும் மோதியது
இன்றைய போட்டியில் முதலில் பேட்டிங் செய்த காஞ்சி வீரன்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 177 ரன்கள் அடித்தது. மிக அபாரமாக விளையாடிய சஞ்சய் யாதவ் 95 ரன்கள் அடித்தார். சதீஷ் 31 ரன்களும்,
விஷால் வைத்யா 27 ரன்கள் எடுத்தனர்
இந்த நிலையில் 178 என்ற இலக்கை நோக்கி விளையாடிய காரைக்குடி காளை அணி 17.4 ஓவர்களில் 67 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து ஆட்டமிழந்தது. இந்த அணியின் மூன்றே மூன்று வீரர்கள் மட்டுமே இரட்டை இலக்கங்களில் ரன்கள் எடுத்தனர். மற்ற அனைத்து வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் தங்கள் விக்கெட்டை பறிகொடுத்தனர்

காஞ்சி வீரன்ஸ் அணியின் சதீஷ் அபாரமாக பந்துவீசி 4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இன்றைய போட்டியில் காரைக்குடி காளை அணி படுதோல்வி அடைந்தது அந்த அணியின் ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது


இதில் மேலும் படிக்கவும் :