டிஎன்பிஎல் தொடரில் நேற்று 2 போட்டிகள்: வெற்றி பெற்ற அணிகள் எவை எவை?
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில் நேற்று நடைபெற்ற 2 போட்டிகளில் திண்டுக்கல் மற்றும் கோவை அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
முதல் போட்டியில் சேப்பாக் மற்றும் திண்டுக்கல் அணிகள் மோதிய நிலையில் திண்டுக்கல் அணி முதலில் பேட்டிங் செய்து 9 விக்கெட் இழப்பிற்கு 170 ரன்கள் எடுத்தது.
ஆனால் சேப்பாக் அணி 20 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்பிற்கு 169 ரன்கள் எடுத்ததால் ஒரே ஒரு ரன் வித்தியாசத்தில் திண்டுக்கல் வெற்றி பெற்றது.
இதனை அடுத்து திருச்சி மற்றும் கோவை அணிகளுக்கு இடையிலான போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த திருச்சி அணி 6 விக்கெட் இழப்பிற்கு 117 ரன்கள் எடுத்த நிலையில் கோவை அணி 18.2 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த நிலையில் திண்டுக்கல் மற்றும் கோவை ஆகிய இரு அணிகளும் தலா 6 புள்ளிகள் பெற்று முதல் இரண்டு இடத்தில் புள்ளி பட்டியலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது
Edited by Siva