1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
  4. Ambati rayudu reportedly may join YSR congress and contest election

கிரிக்கெட் ஓய்வுக்குப் பிறகு அரசியலில் இறங்கும் அம்பாத்தி ராயுடு!

அம்பத்தி ராயுடு
சென்னை  சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான அம்பத்தி ராயுடு சமீபத்தில் ஐபிஎல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். சர்வதேசக் கிரிக்கெட்டில் அவருக்கு சிறப்பான கேரியர் அமையவில்லை என்றாலும், ஐபிஎல் தொடரில் ஆறு முறை ஐபிஎல் வென்ற அணியில் அவர் அங்கம் வகித்துள்ளார்.

இந்நிலையில் இப்போது அவர் அரசியலில் கால்பதிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் ஐபிஎல் கோப்பையோடு ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியை அவர் சந்தித்தார். அதிலிருந்து இந்த பேச்சுகள் எழுந்துள்ளன.

ஜகன் மோகன் ரெட்டியின் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சியில் அவர் இணைய உள்ளதாகவும், ஆந்திர சட்டப் பேரவை தேர்தலில் அவர் போட்டியிடுவார் என்றும் சொல்லப்படுகிறது.
அடுத்த கட்டுரையில்
இந்தியா மற்றும் தமிழ்நாட்டுக்கு பவானி தேவி புகழ் தேடித்தர வேண்டும்- தினகரன்