1100 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்த ஜேம்ஸ் ஆண்டர்சன்!
அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வை அறிவித்துவிட்ட ஜேம்ஸ் ஆண்டர்சன் 40 வயதிலும் டெஸ்ட் கிரிக்கெட்டில் மட்டும் விடாப்பிடியாக விளையாடிக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் தற்போது நடந்து வரும் ஆஷஸ் தொடரில் ஒரு சிறப்பான மைல்கல் சாதனையை எட்டியுள்ளார். முதல் இன்னிங்ஸில் ஆஸி. அணியின் அலெக்ஸ் கேரி விக்கெட்டை வீழ்த்திய போது அவர் முதல் தர கிரிக்கெட்டில் 1100 விக்கெட்களை கைப்பற்றிய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இதுவரை 180 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள ஆண்டர்சன் 686 விக்கெட்களை எடுத்துள்ளார். இந்த தொடரில் 14 விக்கெட்களை வீழ்த்தும் பட்சத்தில் கிரிக்கெட்டில் உலகில் முதல் முதலாக 700 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.