திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 31 ஜூலை 2018 (13:03 IST)

தோல்வியிலிருந்து மீளுமா சேப்பாக் அணி? காஞ்சி வீரன்ஸுடன் இன்று மோதல்

நத்தத்தில் நடைபெறும் இன்றைய ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி காஞ்சி வீரன்ஸ் அணியுடன் மோதுகிறது.
டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இன்று நடைபெறும் ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி, வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணியை சந்திக்க இருக்கிறது.
 
கடந்த ஆண்டு நடைபெற்ற போட்டிகளில் சேப்பாக் அணி சிறப்பாக விளையாடியது. அதற்கு நேர்மாறாக இந்த வருடம் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி இதுவரை நடைபெற்ற 5 லீக் ஆட்டங்களிலும் தோல்வியை சந்தித்துள்ளது.
 
அதேபோல் வி.பி.காஞ்சி வீரன்ஸ் அணியும், இதுவரை விளையாடிய 5 ஆட்டங்களில் 4 முறை தோல்வியை தழுவியது. தோல்வியிலிருந்து மீண்டெழுந்த காஞ்சி அணி கடைசி ஆட்டத்தில் கோவை கிங்ஸ் அணியை தோற்கடித்தது. இன்று விளையாட உள்ள இரண்டு அணிகளும் அடுத்த சுற்றுக்கான வாய்ப்பை இழந்து விட்டன.
 
இந்நிலையில் முதல் வெற்றியை பதிவு செய்ய வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கிறது சேப்பாக் அணி, அதேபோல் கடைசி ஆட்டத்தில் பெற்ற வெற்றியை தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என நோக்கத்துடன் பிராக்ட்டீஸ் செய்து வருகிறது காஞ்சி அணி.
 
இவ்விரு அணிகளுக்காக ஆட்டம் நத்தம் என்.பி.ஆர். கல்லூரி மைதானத்தில் இன்று இரவு 7.15 மணிக்கு துவங்க இருக்கிறது.