சேப்பாக் அணிக்கு 5வது தோல்வி: என்ன ஆச்சு முன்னாள் சாம்பியனுக்கு?

Last Modified சனி, 28 ஜூலை 2018 (22:58 IST)
டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் போட்டியில் கடந்த ஆண்டு சாம்பியன் பட்டம் வென்ற சேப்பாக் சூப்பர் கில்லிஸ் அணி, இந்த ஆண்டு நடைபெற்று வரும் டி.என்.பி.எல் கிரிக்கெட் தொடர் போட்டியில் இதுவரை நான்கு போட்டிகளில் விளையாடி ஒன்றில் கூட வெற்றி பெறாத நிலையில் இன்று நடந்த போட்டியிலும் தோல்வி அடைந்தது.
இன்று சென்னையில் சேப்பாக் அணியும் தூத்துகுடி அணியும் மோதியது. டாஸ் வென்ற சேப்பாக் அணி முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 6 விக்கெட்டுக்களை இழந்து 167 ரன்கள் எடுத்தது. கார்த்திக் 43 ரன்களும், கோபிநாத் 40 ரன்களும் எடுத்தனர்.

இந்த நிலையில் 168 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி விளையாடிய தூத்துகுடி அணி 17,2 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மட்டுமே இழந்து 169 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. தூத்துகுடி அணியின் ஆனந்த் 48 ரன்களும், காந்தி 45 ரன்களும் எடுத்தனர்.இதில் மேலும் படிக்கவும் :