திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 10 நவம்பர் 2020 (07:54 IST)

யார்க்கர் கிங் நடராஜனுக்கு தமிழக முதல்வர் வாழ்த்து

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்றுடன் முடிவுக்கு வருகிறது என்பதும் இன்று நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் மும்பை மற்றும் ஹைதராபாத் அணிகள் மோத உள்ளன என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில்  ஹைதராபாத் அணியின் நட்சத்திர பந்துவீச்சாளரும் யார்க்கர் மன்னனுமான நடராஜன், ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணியில் இடம்பெற்றுள்ளார். இதனையடுத்து அவருக்கு ஏற்கனவே வாழ்த்துக்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் இருந்து வாழ்த்துக்கள் கிடைத்துள்ளது 
 
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் யார்க்க்ர் கிங் நடராஜனுக்கு தனது டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் இதுகுறித்து கூறியதாவது: கிரிக்கெட் உலகின் ஜாம்பவான்களை தமது அசாத்திய பந்துவீச்சால் திக்குமுக்காடச் செய்த சேலம் மண்ணின் மைந்தர் திரு.நடராஜன் அவர்கள் இந்திய அணிக்கு தேர்வாகியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியும் பெருமிதமும் அளிக்கிறது. அவரது சிகரம் நோக்கிய பயணத்தில் தொடர் வெற்றிகள் பெற எனது மனமார்ந்த வாழ்த்துகள்! என்று கூறியுள்ளார்.
 
ஆஸ்திரேலியாவில் நமது யார்க்கர் கிங் நடராஜன் அதிரடியாக அள்ளி குவித்து இந்திய அணியில் நிரந்தர இடம்பிடிக்க வாழ்த்துவோம்