செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : சனி, 7 நவம்பர் 2020 (14:29 IST)

சன்ரைசர்ஸ் வீரர் நடராஜனுக்கு பெண் குழந்தை

சன்ரைசர்ஸ் வீரர் நடராஜனுக்கு பெண் குழந்தை
ஐதராபாத் அணியில் உள்ள முக்கிய பந்து வீச்சாளரான நடராஜனுக்கு பெண் குழந்தை பிறந்துள்ளதை அடுத்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர்
 
தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன், ஐதராபாத் அணியில் சிறப்பாக பந்து வீசி வருகிறார். நேற்றைய போட்டியில் அவர் பெங்களூர் அணியின் முக்கிய பேட்ஸ்மேனான டிவில்லியர்ஸின் நடு ஸ்டெம்பை சிதறச் செய்து அவுட் ஆக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நேற்று அவர் எடுத்த இரண்டு விக்கெட்டுகள் ஆட்டத்தின் திருப்புமுனையாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் நடராஜனின் மனைவி கடந்த சில மாதங்களாக கர்ப்பமாக இருந்த நிலையில் இன்று அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது. தாயும் சேயும் நலம் என தகவல்கள் வெளிவந்துள்ளன. இதுகுறித்து நடராஜன் கூறியதாவது:
 
இந்திய அணிக்காக ஆஸ்திரேலிய அணிக்கு செல்ல இருக்கும் நிலையில் பெண் குழந்தை பிறந்துள்ளது இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கின்றது’ என்று கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய தமிழக வீரர் நடராஜன் ஆஸ்திரேலியா செல்லும் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது தெரிந்ததே