1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 9 நவம்பர் 2020 (12:01 IST)

இந்த சீசனின் சிறந்த கண்டுபிடிப்பு நட்ராஜன்தான் – புகழ்ந்து தள்ளும் விமர்சகர்கள்!

தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் ஐபிஎல் தொடரில் சிறப்பாக பந்துவீசி அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக விளையாடிய தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் உலகெங்கும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளார். டெத் ஓவர்களில் யார்க்கர்களாக வீசி இந்த சீசனில் உலகின் சிறந்த வீரர்களான கோலி, டிவில்லியர்ஸ், தோனி உள்ளிட்ட பல வீரர்களின் விக்கெட்களை கைப்பற்றியுள்ளார் நடராஜன். அதனால் இந்த ஆண்டு சீசனின் மிகச்சிறந்த கண்டுபிடிப்பு நடராஜன்தான் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

பூம்ரா, பாண்ட்யா, தீபக் சஹார், பண்ட் போல ஐபிஎல் மூலம் வெளிச்சம் பெற்றுள்ள நடராஜன் கூடிய சீக்கிரமே இந்தியாவுக்காக விளையாட வேண்டும் என்பதே தமிழக மக்களின் ஆசையாக உள்ளது.