1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Siva
Last Updated : ஞாயிறு, 19 நவம்பர் 2023 (14:56 IST)

ஒரே அணியில் 500 ரன்களுக்கும் மேல் 3 வீரர்கள்.. உலகக்கோப்பையில் இதுதான் முதல்முறை..!

Icc World cup 2023
உலக கோப்பை வரலாற்றில் ஒரே அணியில் மூன்று வீரர்கள் 500 ரன்களுக்கு மேல் அடித்தது இந்த தொடரில் தான் என்பது குறிப்பிடத்தக்கது.
 
உலக கோப்பை இறுதிப்போட்டி தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைபெற்று வருகிறது. இதில் இந்திய அணி 10 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை இழந்தாலும் 80 ரன்களுக்கு மேல் அடித்துள்ளது.
 
இந்த நிலையில் இந்திய அணியில் உள்ள மூன்று வீரர்கள் இந்த உலக கோப்பை தொடரில் 500 ரன்களுக்கு மேல் அடித்துள்ளனர். கடந்த 48 ஆண்டுகளாக நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரில் ஒரே தொடரில் ஒரே அணியில் உள்ள மூன்று வீரர்கள் 500 ரன்களுக்கு மேல் அடிப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது. 
 
அந்த மூன்று வீரர்கள் விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் கே எல் ராகுல் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய போட்டியில் ஸ்ரேயாஸ் அய்யர் அவுட் ஆகிவிட்ட நிலையில் விராட் கோலி மற்றும் கே.எல்.ராகுல் புதிய சாதனை படைப்பார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்
 
Edited by Siva