தொடர்புடைய செய்திகள்
- விராத் கோலி, தோனியை முந்திய ஜடேஜா.. அடுத்த டெஸ்டில் ரிஷப் பண்ட் சாதனை பிரேக் ஆகுமா?
- அகமதாபாத் விமான விபத்து! விசாரணை அறிக்கையில் கேள்விகள்..? - ஏர் இந்தியா
- 22 ரன்கள் தான்.. ஜடேஜா கொஞ்சம் ரிஸ்க் எடுத்திருக்கலாம்.. முன்னாள் வீரர்கள் கருத்து..!
- கடைசி வரை போராடிய ஜடேஜா.. 22 ரன்களில் இந்தியா தோல்வி.. ஆட்டநாயகன் யார்?
- ரன் எடுக்க ஓடும்போது மோதிய கார்ஸ்.. டென்ஷன் ஆன ஜடேஜா.. காரசாரமான வாக்குவாதம்..!
ஜடேஜாவுக்கு எந்த தகவலும் அனுப்பப்படவில்லை… ஆனாலும்?- தோல்வி குறித்து பேசிய கேப்டன் கில்!
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றிக்கு மிக நெருக்கத்தில் வந்த நிலையில் 22 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது இந்திய ரசிகர்களுக்குப் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜடேஜா வெற்றிக்காக தனியாளாகப் போராடினார்.
அவருக்கு உதவியாக கீழ்வரிசை பேட்ஸ்மேன்களான பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோரும் போராடினர். ஆனால் இந்த போட்டியை இந்திய அணியால் வெற்றி பெறமுடியவில்லை. பும்ரா மற்றும் சிராஜ் ஆகியோர் மட்டும் இணைந்து 90 பந்துகளுக்கு மேல் தாக்குப்பிடித்தனர்.
இந்நிலையில் தோல்வி குறித்து பேசியுள்ள இந்திய அணிக் கேப்டன் ஷுப்மன் கில் “ரிஷப் பண்ட்டின் விக்கெட் ஆட்டத்தின் போக்கை மாற்றியது. எங்களிடம் இருந்து எந்த தகவலும் இல்லாமலேயே ஜடேஜா மிகச்சிறப்பாக விளையாடினார். பெரிய இலக்கு இல்லை என்பதால் நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்து போட்டிக்குள் வந்துவிடுவோம் என நினைத்தோம். ஐந்து நாட்களும் போராடியதை நினைத்தால் பெருமையாக உள்ளது” எனப் பேசியுள்ளார்.