செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By vinoth
Last Updated : சனி, 18 நவம்பர் 2023 (13:58 IST)

1.3 லட்சம் ரசிகர்களை அமைதியாக்குவதை விட திருப்தி எதுவும் இல்லை… நாளைய போட்டி குறித்து கம்மின்ஸ்!

இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தேர்வாகியுள்ளது.  2003 ஆம் ஆண்டுக்கு பிறகு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் மோதிக்கொள்ளும் இந்திய ஆஸ்திரேலிய அணிகள் பற்றி பேசிய ஆஸி கேப்டன் பேட் கம்மின்ஸ் “ஆஸ்திரேலிய அணியில் ஏற்கனவே சில வீரர்கள் 2015 ஆம் ஆண்டு உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் விளையாடியுள்ளார்கள். இப்போது இன்னொரு உலகக் கோப்பை இறுதிப் போட்டி. அதுவும் இந்தியாவுக்கு எதிராக விளையாடப் போகிறோம்” எனக் கூறி மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

இந்நிலையில் 1.3 லட்சம் இந்திய ரசிகர்களுக்கு மத்தியில் விளையாடுவது குறித்து பேசியுள்ள அவர் “நாளை எப்படியும் ரசிகர்களின் ஆதரவு ஒருதலை பட்சமாகதான் இருக்க போகிறது. ஆனால் அவர்களை அமைதியாக்குவதை விட திருப்திகரமான ஒன்று எதுவும் இருக்காது. நாளைக்கு எங்களின் இலக்கு அதுவாகதான் இருக்கும்” எனக் கூறியுள்ளார்.