செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By siva
Last Updated : செவ்வாய், 2 பிப்ரவரி 2021 (18:36 IST)

சென்னை சேப்பாக்கம் மைதானம் யாருக்கு சாதகம்? பிட்ச் ரிப்போர்ட்

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்துள்ள நிலையில் இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் வரும் 5ம் தேதி தொடங்க உள்ளது 
 
இதனை அடுத்து இரு நாட்டு அணி வீரர்களும் சேப்பாக்கம் மைதானத்தில் தற்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த போட்டி மிகவும் பரபரப்பாக இருக்கும் என்று கருதப்படுகிறது
 
இந்த நிலையில் முதல் டெஸ்ட் போட்டி நடைபெறும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பிட்ச் ரிப்போர்ட் குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. இந்த மைதானத்தில் ஈரப்பதம் மிகவும் குறைவாக இருக்கும் என்றும் அதனால் சுழல்பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றும் கருதப்படுகிறது. மேலும் பேட்ஸ்மேன்கள் ரன் அடிக்க திணறுவார்கள் என்றும் கூறப்படுகிறது 
 
ஏற்கனவே இந்தியாவில் சுழற்பந்து வீச்சில் வலுவாக இருப்பதால் இந்த போட்டியில் இந்திய அணி அசத்தும் என்று எதிர்பார்க்கலாம்