1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : சனி, 4 ஏப்ரல் 2020 (19:21 IST)

கொரோனா : மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க தமிழக முதல்வர் புதிய அறிவிப்பு !

கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளதாவது :

கொரோனா வைரஸ் ஜாதி, மத வேறுபாடின்றி அனைவரையும் தாக்கக் கூடியது. அதனால் கொரோனா விஷயத்தில் மதச் சாயம் பூசுவதை தவிர்க்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

மேலும்,  கொரோனாவால் பாதிக்காமல் இருக்கவேண்டி  மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க  முதலமைச்சர் புது அறிவிப்ப்புகள் வெளியிட்டுள்ளார்.

கொரோனாவால் பாதிக்கப்படுவோரையும் அவரது குடும்பத்தினரையும் பார்ப்பதை அனைவரும் தவிர்க்க வேண்டும்.

கொரோனா தொற்று உள்ளவர்கள் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற விரும்பினால் உரிய அனுமதி வழங்கப்படும்.

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கு அத்தியாவசியப் பொருட்களை வீடுகளுக்கே சென்று வழங்க அரசு தரப்புடன் இணைந்து சமூக ஆர்வலர்களும் செயல்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்கள் நடமாட்டத்தைக் குறைக்க அத்தியாவசியப் பொருட்கள் வாங்க காலை 6 மணி முதல் பிற்பகல்  1 மணி வரை மட்டுமே அனுமதி; முன்னர் இருந்த 2:30 மணிவரையிலான நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த விதிமுறைகளை மீறுவோர் மீது சட்டப்படியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என் அறிவித்துள்ளார்.