இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3072 ஆக அதிகரிப்பு : 213 பேர் மீட்பு !!
சீனாவில் இருந்து பரவியுள்ள கொரோனா வைரஸால் ஒட்டு மொத்த உலக நாடுகளும் பெரும் பொருளாதார இழப்புகளையும், உயிர் பலிகளையும் சந்தித்து வருகின்றன.
கொரோனா பாதிப்பில் இருந்து மக்களைக் காக்க இந்தியாவிலும் வரும் 14 ஆம் தேதிவரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3072 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 75 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 213 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
மஹாராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரே நாளில் 47 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 537 ஆக அதிகரித்துள்ளது என அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 485 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 3 பேர் பலியாகியுள்ளனர். 7பேர் மீட்கப்பட்டுள்ளனர்.