திங்கள், 6 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 7 டிசம்பர் 2020 (17:03 IST)

டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை… தொடர்ந்து முதலிடம் பிடித்த வீரர்!

டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசையை ஐசிசி வெளியிட்டுள்ளது.

டெஸ்ட் பேட்ஸ்மேன்களின் தரவரிசையில் இன்று வெளியாகியுள்ளது. இதில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் 911 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார். அவருக்கு அடுத்த இடத்தில் இந்திய அணியின் கேப்டன் கோலி 886 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் நியுசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்ஸன் 827 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர். நான்காம் இடத்தில் ஆஸ்திரேலிய வீரர் மர்னஸ் லபுஷானே இருக்கிறார்.

அடுத்து வரும் டெஸ்ட் தொடரில் கோலி ஒரே ஒரு போட்டியில் மட்டும்தான் விளையாடுவார் என்பதால் ஸ்மித் முதல் இடத்தில் இன்னும் சில மாதங்கள் நீடிப்பார்.