வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. கிரிக்கெட்
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 14 நவம்பர் 2020 (08:16 IST)

விராட் கோலியால் பல கோடி நஷ்டமடைய போகும் தொலைக்காட்சி – எப்படி தெரியுமா?

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியால் சேனல் 7 என்ற தொலைக்காட்சி நிறுவனம் பல கோடி ரூபாய் அளவுக்கு நஷ்டமடைய உள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுலா செல்லும் இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. அதில் இப்போது சில மாற்றங்கள் செய்துள்ளது பிசிசிஐ. அதன் படி ஜனவரி மாதம் நடக்க உள்ள டெஸ்ட் தொடரின் கடைசி மூன்று போட்டிகளில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி இடம்பெறமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவியின் பிரசவத்துக்காக அவர் விலகியுள்ளார்.

இந்நிலையில் கடைசி மூன்று டெஸ்ட்களில் கோலி இல்லாதது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் ’மூன்று டெஸ்ட்களில் கோலி இல்லாதது அதிர்ச்சிதான். ஆனாலும் இந்திய அணி அபாயகரமான அணிதான்.’ எனக் கூறியுள்ளார். இந்நிலையில் கோலி இல்லாததால் டெஸ்ட் போட்டியை பார்க்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பெரும் அளவில் குறையும் என சொல்லப்படுகிறது. அதனால் இந்த தொடரை ஒளிபரப்பும் உரிமம் பெற்றுள்ள சேனல் 7 தொலைக்காட்சிக்கு பல கோடி ரூபாய் பொருளாதார இழப்பு ஏற்படலாம் என சொல்லப்படுகிறது.