புதன், 25 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 8 மார்ச் 2021 (16:21 IST)

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்… லார்ட்ஸில் இருந்து வேறு இடத்துக்கு மாற்றமா?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டி லார்ட்ஸ் மைதானத்தில் நடப்பதாக இருந்தது.

உலக டெஸ்ட் அணிகளுக்கான சாம்பியன் ஷிப் போட்டி இந்த ஆண்டு தொடங்கி நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இறுதிப் போட்டிக்கு இந்தியா மற்றும் நியுசிலாந்து அணிகள் தகுதி பெற்றுள்ளன. இந்த தொடரின் இறுதிப்போட்டி அடுத்த ஆண்டு கிரிக்கெட்டின் மெக்கா என அழைக்கப்படும் லார்ட்ஸ் மைதானத்தில் நடக்க இருந்தது.

ஆனால் இப்போது இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் இருந்து சவுத்தாம்ப்டனுக்கு மாற்றப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்த மைதானத்தில் பயோ பபுளில் வீரர்களை வைத்து போட்டியை நடத்துவது எளிது என்பதால் இந்த முடிவை ஐசிசி எடுத்துள்ளதாக சொல்லப்படுகிறது.