வியாழன், 23 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: புதன், 2 நவம்பர் 2022 (19:16 IST)

பணம் கட்ட முடியாது, புளூடிக் தேவையில்லை: பிரபல டென்னிஸ் வீராங்கனை!

martina
பணம் கட்ட முடியாது, புளூடிக் தேவையில்லை: பிரபல டென்னிஸ் வீராங்கனை!
டுவிட்டரில் புளூடிக் கணக்கு வைத்திருப்பவர்கள் எட்டு டாலர் மாதம் கட்ட வேண்டும் என அறிவித்துள்ள நிலையில் புளூடிக் எனக்கு தேவை இல்லை என்றும் பணம் கட்ட முடியாது என்றும் பிரபல டென்னிஸ் வீராங்கனை தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
எலான் மஸ்க் வாங்கிய பிறகு அதிரடியாக வெளியிட்ட அறிவிப்பில் 8 டாலர் செலுத்தினால் மட்டுமே புளூடிக் கொடுக்கப்படும் என்றும் இல்லையெனில் புளூடிக் ரத்து செய்யப்படும் என்றும் தெரிவித்திருந்தார்
 
இந்த நிலையில் இதுகுறித்து முன்னாள் டென்னிஸ் வீராங்கனை மார்ட்டினா நவரத்திலோவா தனது ட்விட்டர் பக்கத்தில் நான் ப்ளூடூத் கேட்கவே இல்லை தானாகவே ஒரு நாள் எனக்கு புளூடிக் தோன்றியது. அதை அகற்றினாலும் எனக்கு பிரச்சனை இல்லை, நான் பணம் கட்ட முடியாது என்று கூறியுள்ளார். அவரது இந்த ட்விட்டரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran