திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Mahendran
Last Modified: புதன், 2 நவம்பர் 2022 (16:42 IST)

உங்கள் கூகுள் பே நம்பரை எனக்கு அனுப்புங்கள்: எலான் மஸ்க்கை கிண்டல் செய்த தமிழ் நடிகர்

elon
டுவிட்டரில் புளூடிக் வைத்திருப்பவர்கள் 8 டாலர் ஒவ்வொரு மாதமும் செலுத்த வேண்டும் என எலான் மஸ்க் கூறிய நிலையில் உங்கள் கூகுள்பே நம்பரை அனுப்புங்கள் என தமிழ் நடிகர் ஒருவர் கிண்டலுடன் டுவிட்டரில் பதிவு செய்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
டுவிட்டர் நிறுவனத்தை பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கினார் என்பதும் அதன் பிறகு அவர் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறார் என்பதையும் பார்த்து வருகிறோம்
 
குறிப்பாக டுவிட்டரில் புளூடிக் கணக்கு வைத்திருக்கும் பயனர்கள் மாதம் ஒவ்வொரு மாதமும் 8 டாலர் செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவு புளூடிக்  கணக்கு வைத்திருப்பவர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
 இந்த நிலையில் எலான் மஸ்க் புளூடிக் கணக்கு வைத்திருப்பவர்கள் எட்டு டாலர் செலுத்த வேண்டும் என்று பதிவு செய்த ட்வீட்டில் தமிழ் நடிகர் சிபிராஜ் அவர்கள் உங்களுடைய கூகுள்பே நம்பரை அனுப்புங்கள் என தெரிவித்துள்ளார். அவரது இந்த கிண்டலுடன் கூடிய பதிவு தற்போது வைரலாகி வருகிறது
 
Edited by Mahendran