1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 2 நவம்பர் 2022 (08:17 IST)

டுவிட்டர் புளுடிக் கட்டணம் எவ்வளவு? எலான் மஸ்க் அதிகாரபூர்வ டுவிட்

twitter
உலகின் மிகப்பெரிய பணக்காரரான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை விலைக்கு வாங்கினார் என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
 
44 பில்லியன் டாலர் கொடுத்து எலான் மஸ்க் டுவிட்டரை வாங்கியுள்ள நிலையில் டுவிட்டரில் பல்வேறு மாற்றம் செய்ய முடிவு செய்துள்ளார். அதன் ஒரு பகுதியாக ட்விட்டர் ப்ளூடூத் பயனர்களுக்கு கட்டணம் என்பதை அறிவித்துள்ளார்
 
டுவிட்டர் ப்ளூடூத் பயனர்களுக்கு 20 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என்று செய்திகள் வெளியான நிலையில் அந்த செய்தியை மறுத்துள்ளார். இதுகுறித்து நேற்று இரவு அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் டுவிட்டர் ப்ளூடூத் பயனர்களுக்கு மாதம் 8 டாலர் கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அந்தந்த நாட்டு கரன்சிகள் இந்த கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்
 
எனவே டுவிட்டர் புளூடிக் வைத்திருப்பவர்கள் கட்டணம் கட்டாவிட்டால் புளுடூத் வசதியை இழக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளதால் புளூடிக் பயனர்கள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 
Edited by Siva