புரோ கபடி போட்டி: டையில் முடிந்தது பெங்கால் -தெலுங்கு டைட்டன்ஸ் போட்டி

Last Modified திங்கள், 12 ஆகஸ்ட் 2019 (22:02 IST)
புரோ கபடி போட்டி கடந்த 4 வாரங்களாக நடைபெற்று வரும் நிலையில் இன்று இரண்டு போட்டிகள் நடைபெற்றன. முதலாவது போட்டியில் பெங்கால் அணியும் தெலுங்கு டைட்டன்ஸ் அணி மோதியது

ஆரம்பத்திலிருந்தே இரு அணி வீரர்களும் மிகத் திறமையாக தங்கள் திறமையை வெளிப்படுத்தி வந்த நிலையில், இறுதி வரையில் ஒருவருக்கொருவர் சளைத்தவர் இல்லை என்ற நிலை ஏற்பட்டது. ஆட்ட நேர முடிவின் போது இரு அணிகளும் தலா 29 புள்ளிகள் எடுத்ததால் இந்த போட்டி டையில் முடிந்தது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது

இதனை அடுத்து நடைபெற்ற இரண்டாவது போட்டியில் உத்தரப்பிரதேச அணியும் பெங்களூரு அணிகள் மோதின. இந்தப் போட்டியும் முதல் போட்டியை போலவே விறுவிறுப்பாக யார் வெற்றி பெறுவார்கள் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு இருந்தது. இருப்பினும் கடைசி நேரத்தில் சுதாரித்த உபி அணி 35 புள்ளிகள் பெற்று வெற்றிபெற்றது. பெங்களூர் அணியால் 33 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது

இன்றைய போட்டியின் முடிவில் டெல்லி அணி 26 புள்ளிகளுடன் முதலிடத்திலும், பெங்களூர் அணி 22 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளன. பெங்கால், ஜெய்ப்பூர் மற்றும் தமிழ்தலைவாஸ் அணிகள் தலா 20 புள்ளிகள் பெற்று அடுத்தடுத்த இடங்களில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :