மீண்டும் கேவலமாக தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ்: ரசிகர்கள் அதிருப்தி

sivalingam| Last Modified ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (08:22 IST)
புரோ கபடி போட்டி தொடரில் கடந்த தொடர்ச்சியாக 10 போட்டிகளில் தோல்வி அடைந்து வரும் தமிழ் தலைவாஸ் அணி நேற்று நடந்த போட்டியிலும் தோல்வி அடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது


இந்த ஆண்டின் புரோ கபடி போட்டி தொடரில் தொடர்ச்சியாக 10 போட்டிகளில் தோல்வி அடைந்த தமிழ் தலைவாஸ் சமீபத்தில் நடந்த புனே அணிக்கு எதிரான போட்டியில் மட்டும் டிரா செய்தது. அந்த போட்டியில் புனே அணி செய்த மிகப்பெரிய தவறு தான் போட்டி டிரா ஆனது என்பது குறிப்பிடத்தக்கது


இந்த நிலையில் நேற்று நடைபெற்ற உபி அணிக்கு எதிரான போட்டியில் தமிழ் தலைவாஸ் அணி வெறும் 22 புள்ளிகள் மட்டுமே எடுத்து படுதோல்வி அடைந்தது. உபி அணி 42 புள்ளிகள் எடுத்து 20 புள்ளிகள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது

நேற்று நடைபெற்ற மற்றொரு போட்டியில் ராஜஸ்தான் மற்றும் குஜராத் அணிகள் மோதின. இரு அணிகளும் சம நிலையில் விளையாடியதால் யார் வெற்றி பெறுவார் என்பதை கணிக்க முடியாத நிலை கடைசி நிமிடம் வரை இருந்தது. இறுதியில் இரு அணிகளும் தலா 28 புள்ளிகள் எடுத்ததால் போட்டி சமனில் முடிந்தது


நேற்றைய போட்டியின் முடிவுக்கு பின்னர் வழக்கம்போல் டெல்லி முதலிடத்தில் உள்ளது. பெங்கால், ஹரியானா, உபி மற்றும் பெங்களூர் அணிகள் அடுத்த நான்கு இடத்தில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்தலைவாஸ் அணி மீண்டு வரவே முடியாத நிலையில் கடைசி இடத்தில் இருப்பதால் ரசிகர்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்


இதில் மேலும் படிக்கவும் :