வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: புதன், 7 ஆகஸ்ட் 2019 (23:52 IST)

புரோ கபடி போட்டி: போராடி டிரா செய்த தமிழ் தலைவாஸ்

புரோ கபடி போட்டியில் இன்றைய ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி, உத்தரபிரதேச அணியுடன் மோதியது. ஆரம்பத்திலிருந்தே விறுவிறுப்புடன் நடைபெற்று வந்த இந்த போட்டி இறுதியில் எந்த அணிக்கும் வெற்றி கிடைக்காமல் சமநிலையில் முடிந்தது. இரு அணிகளும் தலா 28 புள்ளிகள் எடுத்ததால் போட்டி டிரா ஆனது. இந்த போட்டியில் வெற்றி பெற தமிழ் தலைவாஸ் அணி போராடிய போதிலும் அந்த அணிக்கு வெற்றி கிடைக்கவில்லை
 
இதனையடுத்து இன்று நடைபெற்ற இன்னொரு போட்டியில் ஹரியானா மற்றும் பாட்னா அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த ஹரியானா அணி 35 புள்ளிகளும், பாட்னா அணி 26 புள்ளிகளும் எடுத்ததால் அரியானா அணி 9 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது
 
இன்றைய போட்டியில் பின்னர் டெல்லி, ஜெய்ப்பூர், மும்பை ஆகிய மூன்று அணிகள் முதல் மூன்று இடத்தில் உள்ளன. தமிழ் தலைவாஸ் அணி 15 புள்ளிகள் பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது