புரோ கபடி போட்டி: பெங்கால், பாட்னா அணிகள் வெற்றி

Last Modified வெள்ளி, 9 ஆகஸ்ட் 2019 (22:59 IST)
புரோ கபடி போட்டி மூன்றாவது வாரமாக நடைபெற்று வரும் நிலையில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் பெங்களூரு மற்றும் பாட்னா அணிகள் வெற்றி பெற்றன.

இன்றைய முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் மற்றும் மும்பை அணிகள் மோதிய நிலையில் இரு அணிகளும் ஆரம்பத்தில் இருந்தே வெற்றிக்காக தீவிரமாக விளையாடின. இந்த நிலையில் இறுதியில் பெங்கால் அணி 32 புள்ளிகளும், மும்பை 30 புள்ளிகளும் எடுத்ததால் பெங்கால் அணி இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

அதேபோல் இன்று நடைபெற்ற இன்னொரு போட்டி பாட்னா மற்றும் உபி அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் பாட்னா அணி ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்தது. பாட்னா அணி வீரர்கள் மளமளவென புள்ளிகளை குவித்து வந்த நிலையில் உபி அணி வீரர்கள் புள்ளிகள் எடுக்க திணறினார்கள். முதல் பாதியிலேயே பாட்னா அணி முன்னணியில் இருந்த நிலையில் இரண்டாவது பாதியின் முடிவில் பாட்னா அணி 41 புள்ளிகள் எடுத்து எடுத்தது. உஒஉ அணி வீரர்களால் 20 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது. எனவே 21 புள்ளிகள் வித்தியாசத்தில் பாட்னா அணி அபார வெற்றி பெற்றது
இன்றைய போட்டிக்குப் பின்னர் அணிகளின் புள்ளி பட்டியலில் டெல்லி அணி 21 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ஜெய்ப்பூர் அணி மற்றும் பெங்களூர் அணியின் தலா 20 புள்ளிகள் எடுத்து இரண்டாம் மற்றும் மூன்றாம் இடத்திலும் உள்ளன. மும்பை அணி 18 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும், பெங்கால் அணி 17 புள்ளிகளுடன் ஐந்தாவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :