புரோ கபடி 2019: டெல்லி, புனே அணிகள் வெற்றி

Last Modified திங்கள், 5 ஆகஸ்ட் 2019 (22:41 IST)
புரோ கபடி போட்டி தொடரின் இன்றைய இரண்டு போட்டிகளில் டெல்லி மற்றும் புனே அணிகள் வெற்றி பெற்றன

இன்றைய முதல் போட்டியில் டெல்லி மற்றும் ஜெய்ப்பூர் அணிகள் மோதிய நிலையில் இந்த போட்டியில் ஆரம்பத்திலிருந்தே ஆதிக்கம் செலுத்தி வந்த டெல்லி அணி 35 புள்ளிகள் எடுத்தது. டெல்லிக்கு எதிராக விளையாடிய ஜெய்ப்பூர் அணி 24 புள்ளிகள் மட்டுமே எடுக்க முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் புனே அணி குஜராத் அணியுடன் மோதியது. இந்த போட்டி விறுவிறுப்பாக இரு அணிகளில் எந்த அணி வெற்றி பெறும் என்பதை கணிக்க முடியாத அளவுக்கு இருந்த நிலையில் கடைசி நேரத்தில் சுதாரித்த புனே அணி 33 புள்ளிகள் எடுத்து வெற்றி பெற்றது. இதனை எதிர்த்து விளையாடிய குஜராத் அணியை 31 புள்ளிகள் எடுத்ததால் இரண்டு புள்ளிகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது

இன்றைய இரண்டு போட்டிகள் முடிந்த பிறகு டெல்லி அணியில் 21 புள்ளிகளுடன் முதலிடத்திலும் ஜெய்ப்பூர் அணி 20 புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் மும்பை அணி 17 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது


இதில் மேலும் படிக்கவும் :