பரபரப்பான ஆட்டத்தை டிரா செய்த தமிழ் தலைவாஸ்

Last Modified வெள்ளி, 30 நவம்பர் 2018 (22:24 IST)
கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்று வரும் புரோ கபடி லீக் போட்டிகளில் இன்று நடைபெற்ற இரண்டு போட்டிகளில் தமிழ் தலைவாஸ் அணி பாட்னா பைரேட்ஸ் அணியையும், டெல்லி அணி, ஜெய்ப்பூர் அணியையும் எதிர்கொண்டன.

தமிழ் தலைவாஸ்-பாட்னா அணிகளுக்கு இடையிலான போட்டி ஆரம்பம் முதலே விறுவிறுப்பாக இருந்தது. இரு அணிகளும் மாறி மாறி அதிக புள்ளிகளை எடுத்து வந்ததால் யாருக்கு வெற்றி என்று கணிக்க முடியாத நிலை இருந்தது. இந்த போட்டியின் கடைசி நிமிடத்தின்போது இரு அணிகளும் தலா 35-35 என்ற புள்ளிகளில் இருந்ததால் போட்டி டிரா ஆனது


கடைசி சில நிமிடங்கள் போட்டி த்ரில்லாக இருந்தாலும் தமிழ் தலைவாஸ் அணிக்கு கடைசி நிமிடத்தில் வெற்றி பெற வாய்ப்பு இருந்தும் டிரா செய்யும் நோக்கத்தில் விளையாடியது என்பது குறிப்பிடத்தக்கது.


இதில் மேலும் படிக்கவும் :