கற்பழிப்பு புகார் கொடுக்க சென்ற பெண்ணையே கற்பழித்த போலீஸார்

abuse
Last Updated: ஞாயிறு, 25 நவம்பர் 2018 (15:14 IST)
மகாராஸ்டிராவில் கற்பழிப்பு புகார் கொடுக்க சென்ற பெண்ணையே சப் இன்ஸ்பெக்டர் கற்பழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
மகாராஷ்டிராவை சேர்ந்த பெண் ஒருவர் சதீஷ் என்ற வாலிபரை காதலித்து வந்தார். சமீபத்தில் சதீஷும் அவனது நண்பன் சலீமும்  அந்த பெண்ணிற்கு மயக்க மருந்து கொடுத்து கற்பழித்துள்ளார்கள். அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு அதனை வெளியே விட்டுவிடுவோம் என கூறி அந்த பெண்ணை மிரட்டி அவரிடம் பணம் பறித்துள்ளார்கள்.
 
இதுகுறித்து அந்த பெண் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால் அந்த போலீஸ் ஸ்டேஷனின் சப் இன்ஸ்பெக்டர் ரோஹன் என்ற அயோக்கியன் அந்த பெண்ணிற்கு உதவாமல், அவரை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளான். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :