1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
  4. Will rain interrupt world cup final match in melbourne

மகளிர் உலகக்கோப்பை இறுதிப்போட்டி – மழைக்கு வாய்ப்பு இருக்கிறதா ?

இந்தியா
மெல்போர்ன் மைதானம்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய மகளிர் அணிகள் மோதும் உலகக்கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் மழைக்கு வாய்ப்பு உள்ளதா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது.

மகளிருக்கான 7 ஆவது 20 ஓவர் உலகக்கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த பிப்ரவரி 21 ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. இதில் லீக் போட்டிகளில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி அரையிறுதிக்குத் தகுதி பெற்றது. ஆனால் மழையால் அந்த போட்டி கைவிடப்பட்ட நிலையில் புள்ளிகள் அடிப்படையில் இறுதிப் போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டது.

அதேபோல மறுமுனையில் ஆஸ்திரேலிய அணியும் சிறப்பாக விளையாடி இறுதிப் போட்டிக்கு வந்துள்ளது. மகளிர் தினமான இன்று இறுதிப் போட்டி நடக்க இருக்கிறது. இந்நிலையில் போட்டி நடக்கும் மெல்போர்ன் மைதானத்தில் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சில செய்திகள் வெளியாகின. ஆனால் மழைக்கான வாய்ப்பு இல்லை என்று இப்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதை அந்தநாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அடுத்த கட்டுரையில்
டி-20 உலகக் கோப்பை இறுதிப் போட்டி : இந்திய அணி பந்துவீச்சு !