திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Modified: செவ்வாய், 3 ஜூலை 2018 (21:39 IST)

உலகக்கோப்பை கால்பந்து: சுவிட்சர்லாந்தை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்ற ஸ்வீடன்

ரஷ்யாவில் நடைபெற்று வரும் உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் கடைசி இரண்டு நாக் அவுட் போட்டிகள் இன்று நடைபெறுகிறது. இதில் முதல் போட்டி சுவிட்சர்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளுக்கு இடையிலான விறுவிறுப்பான போட்டி சற்றுமுன் முடிந்தது. இந்த போட்டியில் 1-0 என்ற கோல்கணக்கில் ஸ்வீடன், சுவிட்சர்லாந்து அணியை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
 
இரு அணிகளும் ஆக்ரோஷமாக காலிறுதிக்கு தகுதி பெற போராடிய நிலையில் முதல் பாதியில் இரு அணிகளும் கோல்போடவில்லை. எனவே முதல் பாதி முடிவில் 0-0 என்ற கோல்கணக்கில் இரு அணிகளும் சமநிலை வகித்தன
 
இந்த நிலையில் ஆட்டத்தின் இரண்டாம் பாதியில் ஸ்வீடன் அணி 66வது நிமிடத்தில் ஒரு அசத்தலான கோலை போட்டதால் 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதன் பின்னர் ஆட்டநேரம் முடியும் வரை எந்த அணியும் கோல் போடாததால் ஸ்வீடன் அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
 
இன்று நடைபெறும் இன்னொரு போட்டியில் கொலம்பியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டியில் வெல்லும் அணியுடன் ஸ்விடன் அணி காலிறுதியில் மோதும் என்பது குறிப்பிடத்தக்கது.