பெனால்ட்டி ஷூட் மூலம் காலிறுதிக்கு தகுதி பெற்ற குரோஷியா
உலகக்கோப்பை கால்பந்து போட்டியில் நேற்று நடைபெற்ற முதல் ஆட்டமான ரஷ்யா மற்றும் ஸ்பெயின் அணிகளுக்கு இடையிலான போட்டி பெனால்ட்டி ஷூட் மூலம் முடிவு செய்யப்பட்ட நிலையில் இரண்டாவது ஆட்டத்திலும் பெனால்ட்டி ஷூட் மூலம் குரோஷியா அணி டென்மார்க்கை வீழ்த்தி காலிறுதிக்கு தகுதி பெற்றது.
நேற்று நடைபெற்ற டென்மார்க் மற்றும் குரோஷியா அணிகளுக்கு இடையிலான போட்டியில் இரு அணி வீரர்களும் முதல் பாதியில் தடுப்பாட்டத்தை கையாண்டனர். இருப்பினும் முதல் நிமிடத்திலேயே டென்மார்க் வீரர் மதியாஸ் ஜோர்ஜென்சன் ஒரு கோல் அடித்து குரோஷியாவுக்கு அதிர்ச்சி கொடுத்தார். ஆனால் குரோஷியா அடுத்த மூன்றே நிமிடத்தில் பதில் கோல் போட்டு சமநிலைக்கு கொண்டு வந்தது.
இதனையடுத்து முதல்பாதி, இரண்டாம் பாதி என ஆட்ட நேரம் முடியும்வரை இரு அணிகளும் கோல் போடாததால் 1-1 என்ற சமநிலையில் இருந்தன. இதனால் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது. அதிலும் இரண்டு அணிகளும் கோல் பொடவில்லை. இதனையடுத்து பெனால்டி ஷுட் முறை கடைபிடிக்கப்பட்டது. இதில் குரோஷியா 3 கோல்களும் ஸ்பெயின் 2 கோல்களும் போட்டதால் குரோஷியா அணி வெற்றி பெற்று காலிறுதிக்கு தகுதி பெற்றது.
இந்த நிலையில் நேற்று வெற்றி பெற்ற ரஷ்யா மற்றும் குரோஷியா அணீகள் வரும் 7ஆம் தேதி காலிறுதியில் மோதவுள்ளன. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும்