திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Mahendran
Last Modified: வியாழன், 2 மார்ச் 2023 (12:44 IST)

இரண்டாவது இன்னிங்ஸிலும் ஏமாற்றிய சுப்மன் கில்.. ஆஸ்திரேலியா அபார பவுலிங்..!

subman gill
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையே மூன்றாவது கிரிக்கெட் போட்டி நேற்று தொடங்கிய நிலையில் நேற்று ஒரே நாளில் இந்திய இன்னிங்ஸ் முடிவடைந்து ஆஸ்திரேலியா நான்கு விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்திருந்தது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த நிலையில் இன்று ஆஸ்திரேலியா விக்கெட் மளமள என விழுந்ததை அடுத்து அந்த அணியை 197 ரன்களுக்கு ஆட்டம் இழந்தது. இதனை அடுத்து சற்றுமுன் இந்தியா தனது இரண்டாவது இன்னிசை தொடங்கிய நிலையில் தொடக்க ஆட்டக்காரர்களான ரோகித் சர்மா மற்றும் சுப்மன் கில் களமிறங்கினர்,
 
சற்றுமுன் சுப்மன் கில்  5 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லியோன் பந்துவீச்சை அவுட் ஆனார். இவர் ஏற்கனவே முதல் இன்னிங்ஸில் 21 ரன்கள் மட்டுமே எடுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது
 
தொடக்க ஆட்டக்காரராக கேஎல் ராகுல் சரியாக விளையாடாததால் சுப்மன் கில் களமிறக்கப்பட்ட நிலையில் தற்போது அவரும் ஏமாற்றியுள்ளது இந்திய ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது,.
 
Edited by Mahendran