வீட்டிலேயே இருங்க... ஆரோக்கியமா இருங்க - விராட் கோலி, அனுஷ்கா சர்மா வீடியோ !

virat kohli
sinoj kiyan| Last Updated: வெள்ளி, 20 மார்ச் 2020 (18:37 IST)
வீட்டிலேயே இருங்க... ஆரோக்கியமா இருங்க - விராட் கோலி, அனுஷா வீடியோ !

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸால் இந்தியாவும் மெல்ல பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. நேற்று வரை 166 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 223
ஆக உயர்ந்துள்ளது.
அதிகபட்சமாக மஹாராஷ்டிராவில் 49 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே, இத்தாலியை சேர்ந்த 69 வயது முதியவர் ஒருவர் ராஜஸ்தானில் கொரோனா பாதிக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டிருந்தார். அவர் சிகிச்சை பலனின்றி தற்போது உயிரிழந்துள்ளார். இதனால் இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 5 ஆக உயர்ந்துள்ளது.
இந்நிலையில் இந்த கொரோனா வைரஸில் இருந்து நம்மைக் காத்துக் கொள்ள வேண்டுமெனில் அனைவரும் வரும் 22 ஆம்தேதி வீட்டிலேயே இருக்கும் படி பிரதமர் மோடி நேற்று அறிவுறுத்தியிருந்தார்.

இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலியும் அவரது மனைவி அனுஷ்கா சர்மா இருவரும், அரசு அறிவுறுத்தியுள்ளது போன்று
கேட்டு மதித்து, அதன்படி நடப்பது குறித்தும் , கோரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து நம்மைத் தற்காத்துக் கொள்வது குறித்தும், வரும் 22 ஆம் தேதி வீட்டிலேயே இருந்து உடல் நலத்தை காத்துக் கொள்வது குறித்து பேசிய வீடியோ ஒன்றை விராட் கோலியின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இந்த வீடியோ அரை மில்லியனுக்கும் அதிகமான மக்களால் பார்க்கப்பட்டு பகிரப்பட்டு வருகிறது. இந்த வீடியோ வைரல் ஆகி வருகிறது.


இதில் மேலும் படிக்கவும் :