கொல்கத்தாவில் முதல் டெஸ்ட் போட்டி: ஆடுகளத்தை பார்வையிட்ட இலங்கை அணி
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் வந்துள்ள இலங்கை அணி வரும் 16ஆம் தேதி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளது. ஏற்கனவே இலங்கை அணி போர்டு பிரசிடென்ட் லெவன் 2 நாட்கள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் மோதியது. இந்த ஆட்டம் ஆட்டம் டிராவில் முடிந்தது
இந்த நிலையில் நேற்று இலங்கை அணி வீரர்கள் மற்றும் பயிற்சியாளர் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தை பார்வையிட்டனர். ஆடுகளத்தின் ஒருபகுதியை உன்னிப்பாக கவனித்த இலங்கை அணி வீரர்கள் ஆடுகள பராமரிப்பாளர் சுஜன் முகர்ஜியிடம் தங்கள் சந்தேகங்களை கேட்டு விளக்கம் பெற்றதாக கூறப்படுகிறது.
இதே மைதானத்தில் தான் கடந்த 1996ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டியின் அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வி அடையும் நிலை இருந்ததால் ரசிகர்கள் ஏற்படுத்திய பிரச்சனை காரணமாக ஆட்டம் பாதியில் நிறுத்தப்பட்டு இலங்கை அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.