வியாழன், 26 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By sivalingam
Last Updated : சனி, 11 நவம்பர் 2017 (18:19 IST)

இலங்கை அணிக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கான போட்டிகள் முடிவடைந்த நிலையில் இலங்கை அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட், ஒருநாள் மற்றும் டி020 போட்டிகளில் விளையாடவுள்ளது.



 
 
இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி வரும் 20ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது. இந்த நிலையில் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி சற்று முன்னர் அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதன்படி விராத் கோஹிலி, (கேப்டன்), லோகேஷ் ராகுல், முரளி விஜய், தவான், புஜாரா, ரஹானே, ராகுல் சர்மா, சாஹா, அஸ்வின், ஜடேஜா, கேதர் யாதவ், முகமது ஷமி, உமேஷ் யாதவ், புவனேஷ்வர் குமார், இஷாந்த் சர்மா ஆகியோர் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.