திங்கள், 23 டிசம்பர் 2024
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 6 மார்ச் 2022 (11:57 IST)

174 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டும் காலி! – ஃபாலோ ஆன் ஆன இலங்கை!

இலங்கை – இந்தியா இடையேயான டெஸ்ட் தொடரில் முதல் இன்னிங்ஸில் பாலோ ஆன் ஆனது இலங்கை அணி.

இலங்கை – இந்தியா இடையேயான டெஸ்ட் போட்டி மொஹாலியில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் தொடங்கிய இந்தியா பிரமாதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இரண்டு நாள் ஆட்ட முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 574 ரன்கள் குவித்த இந்தியா மேட்ச் டிக்ளேர் செய்தது.

அதை தொடர்ந்து இன்று பேட்டிங் தொடங்கிய இலங்கை அணி 174 ரன்களுக்கே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. தற்போது ஃபாலோ ஆன் கொடுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து இலங்கை அணி விளையாடி வருகிறது. இலங்கை அணியில் பதும் நிசான்கா நிதானமாக அவுட் ஆகாமல் விளையாடி 61 ரன்கள் ஈட்டியதே அணியின் அதிகபட்ச தனிநபர் ரன்னாக உள்ளது.